பாதுகாப்புக்கு பணிக்கு சென்றபோது போலீஸ் வேன் கவிழ்ந்ததில் 8 பெண் போலீசார் காயம்


பாதுகாப்புக்கு பணிக்கு சென்றபோது போலீஸ் வேன் கவிழ்ந்ததில் 8 பெண் போலீசார் காயம்
x
தினத்தந்தி 13 May 2017 2:00 AM IST (Updated: 13 May 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

பாஞ்சாலங்குறிச்சி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ் வேன் கவிழ்ந்தது. இதில் 8 பெண் போலீசார் காயம் அடைந்தனர்.

ஓட்டப்பிடாரம்,

பாஞ்சாலங்குறிச்சி விழாவுக்கு பாதுகாப்புக்கு சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ் வேன் கவிழ்ந்தது. இதில் 8 பெண் போலீசார் காயம் அடைந்தனர்.

போலீஸ் வேன் கவிழ்ந்தது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்டு விழா மற்றும் வீர சக்கதேவி ஆலய விழா நடந்தது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நெல்லையில் இருந்து பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை போலீஸ் வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போலீஸ்காரர் ராஜ்குமார் ஓட்டி வந்தார். அந்த வேனில் 10 பெண் போலீசார் இருந்தனர். ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

8 பெண் போலீசார் காயம்

இதில் வேனில் இருந்த 8 பெண் போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story