செல்போனில் வந்த பிளஸ்–2 தேர்வு முடிவுகள் மாணவ– மாணவிகள் மகிழ்ச்சி


செல்போனில் வந்த பிளஸ்–2 தேர்வு முடிவுகள் மாணவ– மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 2:00 AM IST (Updated: 13 May 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு முடிவுகள் மாணவ– மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

தூத்துக்குடி,

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் மாணவ– மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதற்காக மாணவ–மாணவிகளிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட செல்போன் எண்களுக்கு நேற்று தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. நேற்று காலை 10.10 மணியளவில் இந்த குறுஞ்செய்திகள் வரத்தொடங்கின. மாணவ– மாணவிகள் செல்போனில் வந்த தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து மாணவி ஒருவர் கூறும்போது, முன்பு தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக பள்ளிக்கூடத்துக்கும், இணையதள மையங்களுக்கும் செல்வார்கள். அதன்பிறகு குறுஞ்செய்தி அனுப்பினால் மதிப்பெண் பட்டியல் கிடைத்தது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், பள்ளிக்கூடத்தில் கொடுத்து உள்ள எனது தந்தையின் செல்போனுக்கு மதிப்பெண் பட்டியல் வந்துவிட்டது. இதனால் எந்தவித அலைச்சலும் இல்லாமல் மதிப்பெண்ணை பார்த்து விட்டேன். அதே நேரத்தில் தேர்வில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் குறித்து அறிவிப்பதும் கைவிடப்பட்டு இருப்பதால் மனஉளைச்சலும் இல்லை என்று கூறினார்.

Next Story