குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.75 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.75 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை, கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியீடு
நாகர்கோவில்,
பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டத்தில் 95.75 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களிலும் 54 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 4 அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படும் மேல்நிலைப்பள்ளிகளும், 64 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும், 22 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளும், 86 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் ஆக மொத்தம் 230 பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. குமரி மாவட்டத்தில் 11,662 மாணவர்களும், 13,890 மாணவிகளுமாக மொத்தம் 25,552 பேர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட மாணவிகள் 2,228 பேர் அதிகமாக தேர்வு எழுதியிருந்தனர். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
24,466 பேர் தேர்ச்சி
தேர்வு எழுதியவர்களில் 10,850 மாணவர்களும், 13,616 மாணவிகளும் என மொத்தம் 24,466 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.04-ம், மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 98.03-ம் ஆகும். தேர்வு எழுதிய மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதத்தை கண்டுள்ளனர்.
மாவட்ட அளவில் மொத்த தேர்ச்சி சதவீதம் 95.75 ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.05 சதவீதம் அதிகம் ஆகும். தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டு மாநில அளவில் 6-ம் இடத்தில் இருந்த குமரி மாவட்டம், இந்த ஆண்டு 11-வது இடத்தையே பிடித்தது.
கல்வி மாவட்டங்கள் வாரியாக...
குமரி மாவட்டத்தில், கல்வி மாவட்டங்கள் வாரியாக மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதம் வருமாறு:-
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,548 மாணவர்களும், 4,538 மாணவிகளும் ஆக மொத்தம் 8,086 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,319 மாணவர்களும், 4,452 மாணவிகளுமாக மொத்தம் 7,771 பேர் தேர்ச்சி பெற்றனர். அந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 96.1 ஆகும்.
தக்கலை கல்வி மாவட்டத்தில் 4,061 மாணவர்களும், 4,822 மாணவிகளுமாக மொத்தம் 8,883 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 3,806 பேரும், மாணவிகள் 4,731 பேரும் ஆக மொத்தம் 8,537 பேர் தேர்ச்சி பெற்றனர். அந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 96.1 ஆகும்.
குழித்துறை கல்வி மாவட்டத்தில் 4,053 மாணவர்களும், 4,530 மாணவிகளுமாக மொத்தம் 8,583 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 3,725 பேரும், மாணவிகள் 4,433 பேரும் ஆக மொத்தம் 8,158 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.05 ஆகும்.
முதன்மை கல்வி அதிகாரி
இதுதொடர்பாக குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எலிசபெத் கூறும் போது, “தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ- மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பிளஸ்-2 தேர்வு முடிவு முறையில் இந்த ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது ரேங்க் பட்டியல் முறையை ஒழித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கிடையே நிலவும் ஆரோக்கியமற்ற போட்டியை தடுக்கவும் அரசின் இந்த நடவடிக்கை உதவுகிறது” என்று கூறினார்.

Related Tags :
Next Story