சிவகிரி அருகே வீட்டின் சிமெண்டு ‘சிலாப்’ இடிந்து விழுந்ததில் சிறுமி பரிதாப சாவு
சிவகிரி அருகே வீட்டின் சிமெண்டு ‘சிலாப்‘ இடிந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
சிவகிரி,

10 வயது சிறுமி
நெல்லை மாவட்டம் சிவகிரியை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோதநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் வலம்புரிபாண்டியன். இவருடைய மகள் அனிதா(வயது 10). இவள் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமி அனிதாவின் அத்தை வெள்ளையம்மாள், சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டியில் வசித்து வருகிறார். அந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக அனிதா தனது அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள்.
‘சிலாப்‘ இடிந்து விழுந்து சிறுமி சாவு
நேற்று மதியம் அனிதா வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாக சிவகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அந்த வீட்டின் சிமெண்டு ‘சிலாப்‘ நனைந்து பலமிழந்து இருந்தது. இதனால் சிமெண்டு ‘சிலாப்‘ இடிந்து அனிதாவின் மீது விழுந்தது. இதில் அனிதா பலத்த காயம் அடைந்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அனிதாவை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள்.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டின் சிமெண்டு ‘சிலாப்‘ இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story