குடியிருப்பு பகுதியில் இருந்து மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 37 பேர் கைது


குடியிருப்பு பகுதியில் இருந்து மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 37 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2017 12:54 AM IST (Updated: 13 May 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலை சேர்ந்த கோட்டுச்சேரி–வடமட்டம் சாலையில் உள்ள முக்கூட்டு

காரைக்கால்,

காரைக்காலை சேர்ந்த கோட்டுச்சேரி–வடமட்டம் சாலையில் உள்ள முக்கூட்டு ஆலமரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு நேற்று திடீரென்று மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் மதுக்கடையை உடனே மூடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால் கடையை மூடாததால் மக்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 20 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story