காஞ்சீபுரம் மாவட்டத்தில் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 3:30 AM IST (Updated: 13 May 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 84.35 சதவீதமும், மாணவிகள் 92.18 சதவீதமும் என்று மொத்தம் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பிளஸ்–2 தேர்வை செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 545 மாணவர்களும், 19 ஆயிரத்து 571 மாணவிகளும் என 36 ஆயிரத்து 116 மாணவ–மாணவிகளும், காஞ்சீ புரம் கல்வி மாவட்டத்தில்
6 ஆயிரத்து 543 மாணவர்கள், 7 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 718 மாணவ–மாணவிகளும் என்று காஞ்சீபுரம் மாவட்ட அளவில் 49 ஆயிரத்து 834 மாணவ–மாணவிகள் 110 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 19 ஆயிரத்து 542 பேரும், மாணவிகள் 24 ஆயிரத்து 582 பேரும் என மொத்தம் 44 ஆயிரத்து 124 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் மாணவர்கள் 84.35 சதவீதமும், மாணவிகள் 92.18 சதவீதமும் என்று மொத்தம் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.16 சதவீதம்  குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story