கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் வண்ட லூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவில் குளத்தில் மூழ்கி சாவு.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் வண்ட லூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று கொளப்பாக்கத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி உயிர் இழந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story