மைசூரு அரண்மனை வளாகத்தில் பரபரப்பு டிக்கெட் கவுன்ட்டர்- ஏ.டி.எம். மையத்தில் பயங்கர தீ
மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்- ஏ.டி.எம். மையத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 லட்சம் தீயில் எரிந்து நாசமானது.
மைசூரு,

ஏ.டி.எம். மையத்தில் தீ
மைசூரு டவுனில் பிரசித்தி பெற்ற அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சிறியவர்கள், பெரியவர்கள் என தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரண்மனையில் 4 வாயில்கள் உள்ளன.
இதில் அரண்மனையின் வடக்கு பகுதியில் உள்ள கோட்டை வாசல் அருகே அரண்மனையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுக்க டிக்கெட் கவுன்ட்டர் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம். காவலாளி, வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்தது.
மின்கசிவால் தீவிபத்து
இந்த தீ அருகில் இருந்த டிக்கெட் கவுன்ட்டருக்கும் பரவியது. இதனால் டிக்கெட் கவுன்ட்டர், ஏ.டி.எம். மையங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி சம்பவம் பற்றி நஜர்பாத் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் டிக்கெட் கவுன்ட்டர், ஏ.டி.எம். மையங்களில் பிடித்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீவிபத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த எந்திரம், ஆவணங்களும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரம், குளிர்சாதன கருவி (ஏ.சி.) ஆகியவையும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அரண்மனை மண்டலி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் ரவிக் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
ரூ.3 லட்சம் எரிந்து நாசம்
மேலும் தீவிபத்து நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன்தினம் ரூ.5 லட்சம் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும், அதில் ரூ.2 லட்சத்தை வாடிக்கையாளர்கள் எடுத்திருந்ததும் தெரியவந்தது. அத்துடன் தீவிபத்தில் மீதி இருந்த ரூ.3 லட்சமும் ஏ.டி.எம். எந்திரத்துடன் எரிந்து நாசமானதும் தெரியவந்தது.
இதுபற்றி நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story