தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு


தாம்பரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 13 May 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் வயரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிக்னல் இயங்காததால் நேற்று காலை 9.05 மணி முதல் சென்னை கடற்கரை–தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு–தாம்பரம் இடையே மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில்கள் அனைத்தும் பல்லாவரம் வரை இயக்கப்பட்டன. காலை 10.10 மணியளவில் சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் வயரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, சிக்னல் இயங்கியது.

அதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

Next Story