சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 88.7 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்–2 மாணவர்கள் 88.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை,
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கினார்.
மாநகராட்சி பள்ளிகள்
சென்னை பெருநகர மாநகராட்சியின் 32 மேல்நிலைப்பள்ளிகளில் 6,423 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இதில் 5,700 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் கூடுதல். பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
119 மாணவ–மாணவிகள் பல்வேறு பாடங்களில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 51 மாணவ–மாணவிகள் மட்டுமே 200–க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். 136 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 524 பேர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு பரிசு
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தலைமைச் செயலகத்தில் பரிசு மற்றும் காசோலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக உள்ள நிலையில் தமிழகமும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேற்படிப்புக்கு உதவி
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளியில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வாகும் மாணவ– மாணவிகளுக்கு ஆண்டுக்கு 45 ஆயிரம் ரூபாயும், என்ஜினீயரிங் படிப்புக்கு தேர்வாகும் மாணவ–மாணவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், துணை ஆணையர்(கல்வி) கோவிந்தராவ், கல்வி அலுவலர் ரஞ்சனி, கூடுதல் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story