செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ்–2 மதிப்பெண் மாணவ–மாணவிகள் வரவேற்பு


செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ்–2 மதிப்பெண் மாணவ–மாணவிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 13 May 2017 5:45 AM IST (Updated: 13 May 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 மதிப்பெண்களை அவரவர் செல்போனில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சென்னை,

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த முறை பல்வேறு விதமான புதிய திட்டங்களை அரசு தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி, பிளஸ்–2 மதிப்பெண்களை அவரவர் செல்போனில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, ஒவ்வொரு மாணவ–மாணவிகளும் மதிப்பெண்களை அவரவர் செல்போனில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அரசின் இந்த புதிய திட்டத்துக்கு மாணவ–மாணவிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவ–மாணவிகள் கூறியதாவது:–

தேர்வு முடிவை முன்பெல்லாம் பள்ளிகளுக்கு நேரடியாக வந்தும், இணையதளத்துக்கு சென்றும் மதிப்பெண்களை பார்க்க வேண்டிய நிலை இருந்தது. பள்ளிகளில் முண்டியடித்து கொண்டு அவசர கதியில் நம்முடைய எண்ணுக்கு நேராக இருக்கும் மதிப்பெண்களை பார்க்காமல் அடுத்த வரிசையில் இருக்கும் மதிப்பெண்களை பார்த்து சிலர் கலக்கம் அடைந்து இருக்கின்றனர்.

அதுபோன்ற தவறுகளை களைவதற்கு இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே மதிப்பெண்களை பார்த்துக் கொள்ள இது சிறந்த வழி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story