குற்றங்களை தடுக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு கவர்னர் பாராட்டு


குற்றங்களை தடுக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு கவர்னர் பாராட்டு
x
தினத்தந்தி 13 May 2017 4:02 AM IST (Updated: 13 May 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது’ என்றார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் புதுவையின் கவர்னராக பொறுப்பு ஏற்றது முதல் வாரந்தோறும் மேற்கொண்டு வரும் பல்வேறு துப்புரவு பணிகள், குளங்களை சீரமைத்தல், பொதுமக்களிடம் குறைக்கேட்டல் ஆகியவை 75-வது வாரத்தை நிறைவு பெற்றுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் 7-ந் தேதி வரை கவர்னரால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கவர்னர் மாளிகையில் திரையிட்டு காட்டப்பட்டன. இதில் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரி மாநிலம் தூய்மையில் முதலிடம் வரவேண்டும் என உழைக்கும் அனைவருக்கும் நன்றி. புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது’ என்றார். புதுவையில் கவர்னரும், ஆட்சியாளர்களும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் நாராயணசாமிக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story