தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீதம்
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்–2 தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடிச்சிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா, தொழிலாளி. இவருடைய மகள் பிரேமா (வயது 17). இவர் இவர் பாலதொட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு எழுதினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. இதில் ஒரு பாடத்தில் மாணவி பிரேமா தோல்வி அடைந்துள்ளார். இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். மாணவிக்கு அவருடைய பெற்றோர் ஆறுதல் கூறிவிட்டு வழக்கம்போல கூலிவேலைக்கு சென்றுவிட்டனர்.
தற்கொலைபின்னர் அவர்கள் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மாணவி பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.