கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் கலெக்டர் கதிரவன் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 13 May 2017 10:07 PM IST (Updated: 13 May 2017 10:06 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மூலமாக கலப்படம், தரம் குறைந்த மற்றும் முகப்பு சீட்டு குறைபாடு (லேபிள்) உள்ள உணவு பொருட்களை கண்டறிந்து உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது.

அதன்படி கடந்த ஆண்டு 61 உதவி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் கலப்படம், தரம் குறைந்த மற்றும் முகப்பு சீட்டு குறைகள் கொண்ட உணவு பொருட்களை தயாரித்தவர், விற்பனைக்கு வழங்கியவர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

வாட்ஸ்அப் எண்

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் உணவு பொருட்களின் தர குறைபாடு, கலப்படம் மற்றும் சுகாதாரமின்மை, முகப்பு சீட்டில் குறைபாடுகள் பற்றிய புகார்களை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின் வாட்ஸ்அப் எண்ணான 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு உணவு பொருட்கள் சம்பந்தமான புகார்களை 04343230102 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திலோ நேரடியாக தெரிவிக்கலாம்.

மேலும் உணவு பாதுகாப்பு துறையின் மூலமாக பெறப்படும் உரிமம், பதிவு சான்றிதழ் பெற கடைசி தேதி முடிவடைந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இதுநாள் வரை உரிமம், பதிவு சான்றிதழ் பெறாத உணவு வணிகர்கள் அனைவரும் தவறாமல் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், கலப்படம், தரம் மற்றும் உணவு பொருட்களில் ஒட்டப்படும் லேபிள்களின் விவரங்கள் குறித்த புகார்களை குறுந்தகவலாகவோ, புகைப்படமாகவோ, வீடியோவாகவோ தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story