கடலூர் விளையாட்டு மைதானத்தில் ரூ.1½ கோடியில் நடைபாதை அமைக்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு


கடலூர் விளையாட்டு மைதானத்தில் ரூ.1½ கோடியில் நடைபாதை அமைக்கும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 11:34 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் விளையாட்டு மைதானத்தில் ரூ.1½ கோடியில் நடைபாதை அமைக்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார். ஆய்வு

கடலூர்,

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் மூலம் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1½ கோடி செலவில் நடைபாதை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது நடைபாதையின் இருபக்கங்களிலும் மரக்கன்றுகளை நடுமாறும், எல்.இ.டி. மின் விளக்குகளை அமைத்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

சுகாதார வளாகம்

பின்னர் விளையாட்டு மைதானத்தின் மேற்கு பகுதியில் நடைபாதையை ஒட்டி மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் பெருநகராட்சியின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் கட்டுப்பட்டுவரும் சுகாதார வளாகத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கடலூர் பெருநகராட்சி ஆணையர் விஜயகுமார், கடலூர் நகரசபையின் முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story