தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி நகரில் தீவிர துப்புரவு பணி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி நகரில் தீவிர துப்புரவு பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி நகரில் தீவிர துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. தர்மபுரி பஸ் நிலையத்தில் நடந்த இந்த துப்புரவு பணி முகாமிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்க மாவட்ட தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ்ஜி தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் டி.என்.சி.மணிவண்ணன், டி.என்.சி.இளங்கோவன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்க கோட்ட பொறுப்பாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்0 கலந்து கொண்டு பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தீவிர துப்புரவு பணியை தொடங்கி வைத்தார். இதில் தென்மண்டல சேவாதள பொறுப்பாளர் மோகன், மாவட்ட செயலாளர் ரெங்கதுரை மற்றும் அ.தி.மு.க., ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வுஇதைத்தொடர்ந்து ஆ.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தர்மபுரி புறநகர் பஸ்நிலையம், டவுன்பஸ் நிலையம் ஆகியவற்றில் ஆங்காங்கே குவிந்திருந்த குப்பைகள், கழிவு பொருட்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மைபணி நடைபெற்றது.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.