சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சித்தூர்,
சித்தூரை அடுத்த என்.ஆர்.பேட்டை சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமணன் தலைமையில் போலீசார் நேற்று காலை தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழக பதிவெண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று திருப்பதியில் இருந்து தமிழகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
அந்தக் காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால், அந்தக் கார் நிற்காமல் சென்றது. போலீசார் மற்றொரு காரில், பின்தொடர்ந்து சென்று, அந்தக் காரை மடக்கினர். அப்போது காரில் சோதனைச் செய்தபோது, அதில் செம்மரக்கட்டைகளை கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
10 பேர் கைது
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு காரில் வந்தவர்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28), செல்வம் (29), ஜெயராமன் (23), ராஜேந்திரன் (24), சேகர் (38) என்று தெரிய வந்தது. இந்தச் செம்மரக்கட்டைகளை சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி காரில் கடத்தி சென்று, தமிழகத்தில் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள், சத்தியராஜ் ஆகியோரிடம் ஒப்படைக்க இருந்ததாக கூறினர்.
இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து காருடன் சேர்த்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பாகாலா அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை பாகாலா போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து சித்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமிநாயுடு கூறியதாவது:-
செம்மரம் வெட்ட வர வேண்டாம்
தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆந்திராவுக்கு வந்து சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி வாகனங்களில் கடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வர வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுத்தும், கவுன்சிலிங் கொடுத்தும் மீண்டும் மீண்டும் செம்மரம் வெட்ட வருகிறார்கள். செம்மரக்கடத்தலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம், அவர்களின் பெற்றோர்களே ஆகும். பணத்தை எப்படி நேர்மையாக சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்ளாமல், பணம் எப்படி வந்தாலும் போதும் என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர்.
எனவே பெற்றோர்கள், தங்களின் மகன்களை கண்காணித்தும், கண்டித்தும், புத்திமதிகளை கூறி வளர்க்க வேண்டும். அப்போது தான் செம்மரக்கடத்தல் சம்பவம் முற்றிலும் தடுக்கப்படும். எனவே தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படுவோர், இதற்குமேல் சேஷாசலம் வனப்பகுதிக்கு செம்மரங்களை வெட்டிக்கடத்த வர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story