என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் நடிகர் புனித் ராஜ்குமார் பேட்டி


என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் நடிகர் புனித் ராஜ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2017 3:30 AM IST (Updated: 14 May 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று நடிகர் புனித் ராஜ்குமார் கூறினார்.

சிக்கமகளூரு,

என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று நடிகர் புனித் ராஜ்குமார் கூறினார்.

50–வது நாள் விழா

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், நடிகை பிரியா ஆனந்த், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள கன்னட படம் ‘ராஜகுமாரா’. இந்த படம் வெளியாகி கர்நாடகம் முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் முன்னணி நடிகராக உள்ள புனித் ராஜ்குமார், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி அறிந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ‘ராஜகுமாரா’ படத்தின் 50–வது நாள் விழா நேற்று சிக்கமகளூருவில் உள்ள ஒரு தியேட்டரில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் புனித் ராஜ்குமார், படத்தின் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி கடன் பட்டுள்ளேன்

இதுகுறித்து நடிகர் புனித் ராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நான் நடித்த படத்திற்கு எனது தந்தையின் பெயரை வைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பெண்கள் ரசிக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. குடும்பம், குடும்பமாக எனது படத்தை பார்க்க வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து பாதிப்பு

நடிகர் புனித் ராஜ்குமார் வந்ததை அறிந்த அவருடைய ரசிகர்களும், பொதுமக்களும் அவரை பார்க்க தியேட்டர் முன்பு திரண்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story