ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி கிராமத்திற்கு வரக் கோரி மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி தொண்டர் தற்கொலை மிரட்டல்
மலவள்ளி அருகே, ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி தனது கிராமத்திற்கு வரக் கோரி தொண்டர் ஒருவர் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மண்டியா,
மலவள்ளி அருகே, ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி தனது கிராமத்திற்கு வரக் கோரி தொண்டர் ஒருவர் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை மிரட்டல்மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா அங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 36). ஜனதாதளம் (எஸ்) கட்சி தொண்டரான இவர், அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று காலை பிரசன்னா திடீரென்று தனது வீட்டை ஒட்டியுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது விறு,விறு என ஏறினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அவரை கீழே இறங்கும் படி கூறினர். அதற்கு பிரசன்னா, அங்கனஹள்ளி கிராமத்திற்கு குமாரசாமி வர வேண்டும். இல்லையெனில் நான் குடிநீர் தொட்டி மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு நூற்றுக்கணக்கான மக்களும் கூடிவிட்டனர்.
ஒரு மணி நேர போராட்டம்அங்கு கூடியிருந்த மக்கள், தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் பிரசன்னா அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தப்படி இருந்தார். இதுபற்றி கிராம மக்கள், மலவள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் வலையை விரித்து பிடித்தப்படி இருந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்த பிரசன்னாவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இதுபற்றி ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியிடம் பேசுவதாகவும், தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படியும் கூறினர். இதைதொடர்ந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரசன்னா கீழே இறங்கி வந்தார்.
பரபரப்புபின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக பிரசன்னா மீது மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.