நன்னிலத்தில் 620 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நன்னிலத்தில் 620 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி தலைமை தாங்கினார்.
நாகை கோபால் எம்.பி., உதவி கலெக்டர் முத்துமீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 620 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இறப்பு நிதி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கான ஆணை, மழைத்தூவான் கருவிகள் உள்பட ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரத்து 756 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை
அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் அறிவித்த அனைத்து திட்டங்களும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. உங்களின் தேவை உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். எந்த பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் துணைத்தலைவர் ராம.குணசேகரன், தஞ்சை கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் அன்பு, தாசில்தார் பிருதிவிராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்திலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story