அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்ளின் எந்திரம்–டிராக்டர் பறிமுதல்
செந்துறை அருகே உள்ள சேந்தமங்களம் வெள்ளாற்றில் அனுமதி இன்றி பொக்ளின் எந்திரம் மூலம் டிராக்டரில் சிலர் மணல் அள்ளியதாக தெரிகிறது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சேந்தமங்களம் வெள்ளாற்றில் அனுமதி இன்றி பொக்ளின் எந்திரம் மூலம் டிராக்டரில் சிலர் மணல் அள்ளியதாக தெரிகிறது. இதையறிந்த கடலூர் மாவட்டம் செம்பேரி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பொக்ளின் எந்திரம் மற்றும் டிராக்டரை சிறைப்பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு செந்துறை தாசில்தார் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்ளின் எந்திரம் மற்றும் டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story