மருந்து பொருட்கள் கொள்ளை வழக்கில் மருந்து கம்பெனி ஊழியர் உள்பட 7 பேர் கைது


மருந்து பொருட்கள் கொள்ளை வழக்கில் மருந்து கம்பெனி ஊழியர் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2017 4:07 AM IST (Updated: 14 May 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி மருந்து பொருட்கள் கொள்ளை வழக்கில் மருந்து கம்பெனி ஊழியர் உள்பட 7 பேர் கைது

வாலாஜாபாத்,

சுங்குவார்சத்திரம் அருகே லாரியை கடத்தி ரூ.2 கோடி மருந்துபொருட்களை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் மருந்து கம்பெனி ஊழியர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

ரூ.2 கோடி மருந்து பொருட்கள் கொள்ளை

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் இருந்து சென்னை ஆலந்தூரில் உள்ள அதன் கிளை நிறுவனத்துக்கு கடந்த 4–ந்தேதி லாரியில் ரூ.2 கோடி மருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

அந்த லாரி சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை–பெங்களூர் சாலையில் வந்தபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த லாரியை வழிமறித்தது. பின்னர் லாரி டிரைவர் சேகர், காவலுக்காக வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேசன் ஆகியோரை தாக்கி விட்டு லாரியை கடத்தி சென்றது.

பின்னர் லாரியில் இருந்த ரூ.2 கோடி மருந்து பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டு லாரியை அனாதையாக நிறுத்தி விட்டு சென்றது.

இந்த கொள்ளை தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் மருந்து பொருட்கள் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி(வயது28), கணேசன், படப்பையை சேர்ந்த அமுன்உல்லா(22), ஆவடியை சேர்ந்த ஜெயகுமார்(36), சைதாப்பேட்டையை சேர்ந்த பழனி(36), ரவிக்குமார்(51) மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த மருந்து கம்பெனி ஊழியர் சதிஷ்குமார்(34) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story