என்ஜினீயர் உடல் நசுங்கி பலி கன்டெய்னர் லாரி அடியில் கார் புகுந்து விபத்து வெளிநாட்டில் இருந்து தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்த போது துயரம்
கன்டெய்னர் லாரி அடியில் கார் புகுந்து விபத்து என்ஜினீயர் உடல் நசுங்கி பலியானார்.
மும்பை,
கன்டெய்னர் லாரி அடியில் கார் புகுந்து விபத்து என்ஜினீயர் உடல் நசுங்கி பலியானார். வெளிநாட்டில் இருந்து தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்த போது அவர் இந்த விபத்தில் சிக்கினார்.
விபத்துநவிமும்பை நெருலை சேர்ந்தவர் ஜித்தேஷ் ஜாதவ் (வயது35). என்ஜினீயர். தென்னாப்பிரிக்காவில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பல்லவி (32). டாக்டராக உள்ளார். இந்த தம்பதிக்கு நினாட் என்ற மகன் இருக்கிறான்.
இந்த நிலையில், தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜித்தேஷ் ஜாதவ் அண்மையில் நவிமும்பை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் பாராமதிக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
காரில் பல்லவியின் பெற்றோர் இந்திரஜித் (65), சோபா (58) ஆகியோரும் இருந்தனர். கார் மும்பை – புனே நெடுஞ்சாலையில் காம்சேத் குகை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி பின்பக்கத்தில் பலமாக மோதி அடியில் சிக்கி கொண்டது.
என்ஜினீயர் பலிஇந்த விபத்தில் ஜித்தேஷ் ஜாதவ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்லவி மற்றும் அவரது பெற்றோர் படுகாயம் அடைந்தனர். சிறுவன் நினாட் லேசான காயத்துடன் தப்பினான். தகவல் அறிந்து வந்த காம்சேத் போலீசார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நிகிடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஜித்தேஷ் ஜாதவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.