ஒரு பசுமாடும் .. ஒளிமயமான வாழ்க்கையும்..!
கைநிறைய சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு தந்தையும், மகளும் விவசாயத்தில் களம் இறங்கி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தந்தையுடன் அங்கீதா
இருவரும் வேலை பார்த்தபோது எவ்வளவு சம்பாதித்தார்களோ அதற்கு இணையாக விவசாயத்திலும் மகசூல் ஈட்டி வருமானத்தை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசு ஊழியராக இருந்து விவசாயியாக அவதாரம் எடுத்திருக்கும் தந்தையின் பெயர் போல்சந்த் குமாவார். இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு பொதுப்பணி துறையில் வேலை பார்த்தவர். இவருடைய மகள் அங்கீதா எம்.பி.ஏ. படித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அங்கீதா, தான் கற்ற கல்வி மூலம் நவீன தொழில்நுட்ப யுக்திகளை விவசாயத்தில் புகுத்தி தந்தைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் பகுதியை சேர்ந்த இவர்கள் ஆர்கானிக் விளைபொருட் களை விளைவிப்பதோடு பண்ணையையும் நிர்வகித்து வருகிறார்கள். மகளின் பால் தேவைக்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பசுமாட்டை வளர்த்த போல்சந்த், இன்று 100 மாடுகளை கொண்ட பண்ணைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். அவர் விவசாயத்தின் மீதும், கால்நடைகள் மீதும் நேசம் கொண்டிருப்பதற்கு மகள் அங்கீதாதான் காரணம்.
3 வயதில் அங்கீதா கடுமையான மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். அதில் இருந்து மகளை மீள வைப்பதற்கு போல்சந்த் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது. தூய்மையான பசும்பால் மற்றும் கலப்படமற்ற உணவுவகைகளை சாப்பிட்டு வந்தால்தான் உடல் நிலை விரைவில் சீராகும் என்று டாக்டர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து தூய பசும்பால் வாங்குவதற்காகவே பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்திருக்கிறார். ஆனால் தண்ணீர் கலப்பில்லாத சுத்தமான பால் கிடைப்பது அரிதாகவே இருந்திருக்கிறது. ஒருமுறை ரக்ஷா பந்தன் விழாவிற்காக மார்க்கெட்டில் இருந்து நெய் வாங்கி வந்து வீட்டில் இனிப்பு வகைகளை தயார் செய்திருக்கிறார். அதனை சாப்பிட்ட குடும்பத்தினர் அனைவரும் உடல் உபாதை பிரச்சினைக்கு ஆளாகி இருக்கிறார்கள். நெய்யில் கலப்படம் இருந்திருப்பது அதன்பிறகுதான் தெரியவந்திருக்கிறது.
“25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமாடு ஒன்றை வாங்கினேன். அப்போதே அதன் விலை ரூ.3,500. குடும்பத்தினர் குறிப்பாக, நோய்வாய்ப்பட்டிருந்த மகள் தூய பால் மற்றும் கலப்படமற்ற பால் பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அதை வாங்கினேன்” என்கிறார்.
பசும்பாலை தொடர்ந்து பருகி வந்ததன் மூலம் அங்கீதாவின் உடல்நலம் தேறியிருக் கிறது. அதை பார்த்ததும் பால் மட்டுமின்றி காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் போன்றவைகளை இயற்கை முறையில் விளைவித்து உண்டால் உடல் ஆரோக்கியம் மேலும் பலப்படும் என்ற எண்ணம் போல்சந்திற்குஉண்டாகியிருக்கிறது. தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை தாமே விளைவிக்க வேண்டும் என்று முடிவெடுத் திருக்கிறார். ஆனால் பணிக்கு மத்தியில் பயிர்களை விளைவிக்க அவரால் போதுமான நேரம் ஒதுக்கமுடியவில்லை. அப்போதுதான் வேலையை விட்டுவிடலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால் குடும்பத்தை நிர்வகிப்பதற்கு நிரந்தர வருமானம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அந்த முடிவை கைவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே அவர் வளர்த்த பசுமாடு அடுத்தடுத்து கன்றுக்குட்டிகளை ஈன்று வந்திருக்கிறது. குடும்பத்தினரின் தேவை போக, வெளியிடங்களுக்கு பாலை விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார். அது கால்நடைகள் வளர்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக் கிறது. நாளடைவில் கால்நடைகளின் எண்ணிக்கை உயர, பணிக்கு மத்தியில் அவைகளை பராமரிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். அங்கீதா படிப்பை முடித்த பிறகு போல்சந்தின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கிடைத்திருக்கிறது.
அங்கீதா வேலைக்கு செல்ல தொடங்கியதும் போல்சந்த் 2009-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்று விட்டார். உடனே அஜ்மர் பகுதியில் நிலம் வாங்கி காய்கறிகள், தானியங்கள் பயிரிட தொடங்கி இருக்கிறார். தந்தை யின் விவசாய ஆர்வத்தை பார்த்த அங்கீதாவுக்கு நாளடைவில் விவசாயத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தந்தை யுடன் கைகோர்த்து விவசாயத்தில் களம் இறங்கிவிட்டார்.
“ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரையும் போலவே, நாங்களும் எப்பொழுதும் வேலையை சார்ந்தவர்களாக இருந்தோம். விவசாயத்தையோ அல்லது வேறு எந்த வியாபாரத்தையோ பற்றி நினைத்து பார்த்ததில்லை. ஆனால் ஒருகட்டத்தில் என் அப்பா விவசாயத்தை எந்த அளவுக்கு உயிர்மூச்சாக கொண்டிருக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் விவசாயத்தை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டார். மூத்த மகளாக அவருக்கு துணை நிற்க முடிவு செய்தேன்” என்கிறார்.
அங்கீதா தான் கற்ற கல்வியிலும், பார்த்த வேலையிலும் பெற்ற தொழில்நுட்ப அறிவை கூர்தீட்டி, பாரம்பரியமும், நவீனமும் கலந்த விவசாய பணிகளை மேற்கொண்டிருக்கிறார். தந்தைக்கு நவீன தொழில் நுட்ப யுக்திகளை கற்றுக்கொடுத்து பண்ணையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார். காளான் வளர்ப்பிலும் கவனம் செலுத்த இருக்கிறார். அதற்காக இமாசலபிரதேசம் சென்று காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி எடுத்திருக்கிறார்.
இவர்களுடைய விளை நிலத்தில் சூரிய மின்சார கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் சொட்டு நீர் பாசன முறை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மழை நீர் சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கோதுமை மற்றும் பருவகாலநிலைக்கு ஏற்ப காய்கறிகளை பயிர் செய்து வருகிறார்கள்.
கைநிறைய சம்பாதித்த வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்து வருவது பற்றி அங்கீதா சொல்கிறார்:
“கார்ப்பரேட் வேலையில் நிலையான ஊதியம் பெறலாம். ஆனால் விவசாயம் செய்தால் உடல் நல குறைபாடு இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். அடுத்த தலை முறைக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துவிட்டு செல்லலாம்” என் கிறார்.

Related Tags :
Next Story