தள்ளாடாத குத்தாட்டம்..!
ஐ.பி.எல் போட்டியில் வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் ‘சியர் கேர்ஸ்’ போலவே ஜப்பானில் ‘பாம் பாம்’ என்ற சியர்லீடிங் குழு இயங்குகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் குழுவில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் அத்தனை பேருமே 55 வயதை கடந்தவர்கள். தோற்றத்திலோ, உற்சாகத்திலோ முதுமையை வெளிக்காட்டாமல் 20 ஆண்டுகளாக இளமை துடிப்புடன் இயங்கி வருகிறார்கள்.
84 வயதான புமி டானகோ என்ற மூதாட்டி ‘பாம் பாம்’ குழுவை உருவாக்கியவர். முதுமை காலத்தில் தனிமையை உணராமல் சக பெண்களுடன் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நகர்த்தும் நோக்கில் இக்குழுவை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான விளையாட்டு போட்டி உள்பட இந்த குழுவினர் பங்கேற்கும் போட்டிகளில் பார்வையாளர் களிடையே உற்சாகம் கரைபுரள்கிறது. அந்த அளவிற்கு முதுமையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உற்சாக துள்ளல் போட்டு குஷிப்படுத்து கிறார்கள்.
“என் இளமைப் பருவத்தில் சியர்லீடிங் மீது எனக்கு பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. ஆனால் காலம் முதுமையில் அதன் மீது ஈடுபாடு கொள்ள செய்துவிட்டது. 53 வயதில் டெக்சாஸ் சென்று படிக்க விரும்பினேன். என் அம்மா உட்பட பலரும் எதிர்த்தனர். ஆனால் குழந்தைகள் என்னை ஆதரித்தனர். 60 வயதில் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். அந்த நேரம் வெறுமையை உணர்ந்தேன். அதிலிருந்து மீள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தேன். அப்போது தான் சியர்லீடிங்கைத் தேர்ந்தெடுத்தேன்.
என்னைப்போல தனிமையை உணர்ந்த 5 பெண்களைச் சேர்த்துக்கொண்டு, ஜப்பான் பாம் பாம் என்ற பெயரில் சியர்லீடிங் அமைப்பை ஆரம்பித்தேன்.
இருபது ஆண்டுகளைக் கடந்தும் எங்கள் குழு உற்சாகமாக இயங்கி வருகிறது. தற்போது 28 பெண்கள் இருக்கிறார்கள். மிகக் கடினமான விஷயங்களை நாங்கள் செய்வதில்லை. ஆனால் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள தயங்கியதும் இல்லை. வாரம் ஒருமுறை குழுவினர் அனைவரும் ஒன்றாக சந்தித்து, எங்கள் திறமைகளை எப்படி மேம்படுத்திக்கொள்வது, எந்தமாதிரியான வித்தியாசங்களை புகுத்துவது, சுவாரசியம் கூட்டுவது என்று திட்டமிடுகிறோம்.
அதை உடனே செயல் படுத்தியும் வருகிறோம். எங்களுக்குள் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் 55 வயதானால் மட்டுமே எங்களது குழுவில் இடம் பிடிக்க முடியும். ஓய்வு பெறுவது அவரவர் விருப்பம்”என்கிறார் புமி டானகோ.

Related Tags :
Next Story