மத்திய அரசு பணிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 1,765 பேர் எழுதினர்


மத்திய அரசு பணிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 1,765 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நடைபெற்ற மத்திய அரசு பணிக்கான எழுத்து தேர்வில் 1,765 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

நெல்லை,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி. அமைப்பு மூலம் நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது. நெல்லையில் இந்த தேர்வு 8 மையங்களில் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங் கோட்டை மேரி சார்ஜெண்ட், கதீட்ரல், சாராள் தக்கர், ஜான்ஸ் மற்றும் கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

1,765 பேர்...

இந்த தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 4,032 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 1,765 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 2,267 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு காலை மற்றும் மாலை என நடத்தப்பட்டது. இந்த தேர்வை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர். இதேபோல் வருகிற 28-ந்தேதியும் மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் நெல்லை மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story