சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 2 நண்பர்கள் பலி
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலம்,
சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி அருகே உள்ள கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சிவபாலன் (வயது 22). கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் சூர்யா (22). இவரும், சிவபாலனும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் நேற்று காரிப்பட்டி பகுதியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் ஜாரிகொண்டலாம்பட்டி அணியும் விளையாடியது. தங்கள் பகுதி அணி விளையாடியதால் அந்த போட்டியை பார்க்க சிவபாலனும், சூர்யாவும் முடிவு செய்தனர். அதன்படி, மதியம் 1.30 மணிக்கு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜாரிகொண்டாலாம்பட்டியில் இருந்து காரிப்பட்டி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சிவபாலன் ஓட்டினார். பின் இருக்கையில் சூர்யா அமர்ந்திருந்தார்.
கார் மோதியது
சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. மேலும் நிற்காமல் சென்ற கார் அந்த வழியாக வந்த ஒரு லாரி மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் சேலம் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே, சிவபாலனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து 2 பேரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற 2 நண்பர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story