தரிகெரே தாலுகாவில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அண்ணன் புகார்
தரிகெரே தாலுகாவில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் அண்ணன் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
சிக்கமகளூரு,

குடும்ப தகராறு
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அஜ்ஜாம்புரா அருகே உள்ள அம்ருதபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாயக். இவரது மனைவி தேவிபாய்(வயது 42). இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சங்கரநாயக் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தேவிபாயை அடித்து, உதைத்து வந்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சங்கரநாயக், தேவிபாயிடம் தகராறு செய்ததோடு அவரை அடித்ததாக தெரிகிறது. இதனால் தேவிபாய் மனம் உடைந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீ அவரது உடல் முழுவதும் மளமளவென பரவி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து தேவிபாயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தீயில் கருகி தேவிபாய் பரிதாபமாக இறந்தார்.
தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த அஜ்ஜாம்புரா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தேவிபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் குடும்ப தகராறில் தேவிபாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கிடையே தேவிபாயின் அண்ணன் சோமசேகர் அஜ்ஜாம்புரா போலீசில், எனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளது.
அவர் மீது கணவர் சங்கரநாயக் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்று கருதுகிறேன். இதனால் அவரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாயக்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story