போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு: பயணிகளின் வசதிக்காக போதிய பஸ்களை இயக்க வேண்டும்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு: பயணிகளின் வசதிக்காக போதிய பஸ்களை இயக்க வேண்டும்,அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருப்பூர்,
போக்குவரத்து ஊழியர் களின் வேலை நிறுத்த அறிவிப்பால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் போதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் 15-ந்தேதி முதல் (இன்று) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் நேற்று போக்குவரத்துதுறை அமைச்சர், தொழிற்சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று முதலேயே போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொடங்கி விட்ட னர். இதனால் திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கும், திருப்பூரையொட்டி உள்ள கிராமங்களுக்கும் இயக்கப்பட்ட பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போலீஸ் பாதுகாப்பு
போக்குவரத்து கழக ஊழியர்களின் பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டும், அனைத்து பஸ்களை இயக்க ஏதுவாக கூடுதல் பணியாளர்களின் பட்டியலை பெற்று வைத்தல் வேண்டும்.
மேலும், எத்தனை பஸ்கள் இயக்கப்படுகிறது, எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடும் என்பதையும் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப பஸ்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகளில் இருந்தால் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் போலீஸ்துறை அதிகாரிகளிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்து தகுந்த பாதுகாப்பை பெற்று கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிமனைகளிலிருந்தும் வெளியேறும் பஸ்களுக்கு பாதுகாப்பு அளிக்க எவ்வளவு போலீசார் தேவை என்பதை ஒருங்கிணைத்து முன்கூட்டியே போலீஸ்துறை உயர் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
போலீசாரும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வேலை நிறுத்த தினங்களில் இயக்கப்படும் பஸ்களுக்கு போதுமான அளவில் எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், பஸ்களில் எரிபொருள் போதுமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தில் போதிய பஸ்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் இயக்க வேண்டும்.
சுழற்சி முறையில் கண்காணிப்பு
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இந்த போராட்ட நாட்களில் தனியார் பஸ்கள் மற்றும் மின் பஸ்கள் சரியாக இயக்கப்படுகிறதா? கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுகிறதா? விதிமுறை மீறல்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். காய்கறிகள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வித அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களுடைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பஸ்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாக்க சிறப்பு செயல் நடுவர்களை நியமித்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.உமா, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள் உள்பட தொடர்புடைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story