வெவ்வேறு இடங்களில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது47). இவர் ஆதனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி தற்கொலை
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (50), விவசாயி. இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று லட்சுமணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story