அரியலூரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது
தாமரைக்குளம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை முன்கூட்டியே தொடங்கினர். அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர். அரியலூர் போக்குவரத்து கழக ஊழியர்கள், பஸ்களை பணிமனையில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று 25 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. இதனால் அரியலூர் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக காத் திருந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்கூட்டியே போராட்டத்தை தொடங்கியதால் கிராமங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story