ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், முத்தரையர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முத்தரையர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாநில தலைவர் காஞ்சிகாடக முத்திரையர், மாநில நிர்வாகிகள் மரு.பாஸ்கரன், மாநில விவசாய அணி செயலாளர் ஆசிரியர் முகிலன், பொருளாளர் முருகேசன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில், ஊற்றத்தூர் சுருதிமான் நக்கன் எனும் சந்திரன் ராஜமல்லன் முத்திரையர் நினைவை போற்றும் வகையில் வரலாற்று புத்தகமாக வெளியிட வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
முத்தரையர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற சாத்வீகமான முறையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது, வருகிற 23-ந் தேதி பெரும் பிடுகு முத்தரையர் விழாவை பெரம்பலூரில் கொண்டாடுவது, முத்தரையர்களுடன் இனமாக சமுதாயங்களான மீனவர்கள், ஊராளி கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த வன்னியகுல சத்திரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழக அரசியல் களத்தில் மக்கள் சக்தியை நிரூபிக்க திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்துவது, ஜெயலலிதாவின் 75 நாள் மருத்துவமனை சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story