திருத்தணி அருகே மணல் கடத்தலை தடுத்த ஆர்.டி.ஓ. மீது தாக்குதல்
திருத்தணி அருகே மணல் கடத்தலை தடுத்த ஆர்.டி.ஓ. மீது தாக்குதல், லாரிகளை கடத்தி சென்றனர்
திருத்தணி
திருத்தணி அருகே உள்ள கீழாத்தூர் நந்தி ஆற்று பகுதியில் இருந்து திருத்தணி வழியாக மணல் கடத்தப்படுவதாக திருத்தணி ஆர்.டி.ஓ. விமல்ராஜ்க்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று அதிகாலை திருத்தணி அருகே அவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அவருடன் டிரைவர் பிரபாகரும் உடன் இருந்தார். அப்போது மணல் கடத்தி வந்த லாரிகளை அவர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இருந்தவர்களிடம் ஆர்.டி.ஓ. விமல்ராஜ் விசாரணை நடத்தினார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் லாரிகளை விடுவிக்கும்படி ஆர்.டி.ஓ. விமல்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இதனை தடுக்க முயன்ற டிரைவர் பிரபாகருக்கும் அடி விழுந்தது.
பின்னர் மர்ம கும்பல் கடத்தல் மணல் லாரிகளை அங்கிருந்து எடுத்து சென்று விட்டனர். மணல் கடத்தலை தடுத்த ஆர்.டி.ஓ.வை தாக்கி லாரிகளை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story