ஹோலி பண்டிகையின் போது இளம்பெண்ணை மானபங்கம் செய்த 3 பேருக்கு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
ஹோலி பண்டிகையின் போது இளம்பெண்ணை மானபங்கம் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தானே, மே.15-

இளம்பெண் மானபங்கம்
பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஆண்டு ஹோலி பண்டிகை அன்று அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மகேஷ்(வயது20), நரேஷ் பத்ரா(28), கோந்தியா(21) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் அந்த இளம்பெண் மீது வண்ணப்பொடியை பூசும் சாக்கில் அவரது உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு மானபங்கம் செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
3 பேருக்கு ஜெயில்
பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இதில் சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். மற்ற 3 பேர் மீதும் போலீசார் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் மீதான மானபங்க குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story