கடற்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்
கடற்படையில் 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்திய கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கடற்படைக்குச் சொந்தமான மும்பை கப்பல்தளத்தில் டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு 384 பேரும், தெற்கு கமாண்டிங் அலுவலகத்தில் ‘குரூப்-சி’ பணிகளுக்கு 97 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர இசைப் பிரிவிலும் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
மும்பை கடற்படை தளத்தில் டிரேட்ஸ்மேன் மேட் பணிக்கு தேர்வு செய்யப்படும் 384 இடங்களில் பொதுப் பிரிவுக்கு 194 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 104 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 57 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 29 இடங்களும் உள்ளன.
25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-5-2017-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.bhartiseva.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
கொச்சியில் 97 பணிகள்
கொச்சி தெற்கு கமாண்டிங் கிளையில் குரூப்-சி பணிகளுக்கு 97 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிரேட்ஸ்மேன், டிரேட்ஸ்மேன் மேட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், சிவிலியன் மோட்டார் டிரைவர், என்ஜின் டிரைவர், டோபாஸ், தீயணைப்பு வீரர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அதிபட்சமாக டிரேட்ஸ்மேன் மேட் பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணி உள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் தளர்வு, கல்வித்தகுதி விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயார் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் கொச்சி, தெற்கு கமாண்டிங் தலைமை அலுவலகத்திற்கு சென்றடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு மே 6-12 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.
இசைப்பிரிவில் இளைஞர்கள் சேர்க்கை
இதேபோல ‘சாய்லர் (எம்.ஆர்- மியூசிசன்) - 2-3017’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் கடற்படையின் இசைப் பிரிவுக்கு திருமணமாகாத இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதிக இசைத்திறன் பெற்றவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், இசைப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இசைத்தல் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 19-5-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story