மின்சாரம் -குளிர்ச்சி தரும் சூரியசக்தி ஜன்னல்


மின்சாரம் -குளிர்ச்சி தரும் சூரியசக்தி ஜன்னல்
x
தினத்தந்தி 15 May 2017 2:31 PM IST (Updated: 15 May 2017 2:30 PM IST)
t-max-icont-min-icon

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுடன், வீட்டிற்குள் வெப்பம் மிகாமலும் குளிர்ச்சி பரப்புகிறது.

னி வீட்டிற்கு குளிர்ச்சி வேண்டுமானால் ஏ.சி. பொருத்த வேண்டாம், சூரிய சக்தி ஜன்னலை மாட்டினால்போதும், வீட்டிற்குத் தேவையான மின்சாரமும், குளிர்ச்சியும் கிடைத்துவிடும். அப்படியொரு நவீன ஜன்னலை அறிமுகம் செய்துள்ளது அமெரிக்காவின் சோலார் கேப்ஸ் நிறுவனம்.

மூடித் திறக்கும் வகையில் பல அடுக்குகளாக உள்ளது சூரிய சக்தி தகடுகள். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுடன், வீட்டிற்குள் வெப்பம் மிகாமலும் குளிர்ச்சி பரப்புகிறது. சிறப்பம்சமாக, இதில் உள்ள சென்சார்கள் சூரிய கதிர்கள் எந்த கோணத்தில் சிறப்பாக விழுமோ, அதை கணித்து, ஜன்னல் தகடுகளை அந்தக் கோணத்திற்கு தானியங்கி முறையில் திருப்பிக் கொள்கிறது. இதனால் அதிக அளவில் சூரிய ஒளியை ஈர்த்து போதுமான அளவுக்கு மேல் மின்சாரம் தயாரிக்கலாம்.

ஒரு சதுர மீட்டர் சூரிய சக்தி ஜன்னல் மூலம் ஒரு மணி நேரத்தில் 100 வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார் இதை உருவாக்கி உள்ள இளம் தொழில் முனைவோரான எவ்ஜென் எரிக். வீட்டின் உட்புறமாக இந்த தடுகளை பதித்தால் பாதி அளவு மின்சாரம் பெற முடியுமாம். அதிகப்படியான மின்சாரத்தை அக்கம் பக்கத்தவர்கள் அல்லது மின்நிறுவனங்களுக்கு விற்பதற்காக சேமித்து வைக்க முடியும்.

அப்ளிகேசன் உதவியுடன் இந்த ஜன்னல் தகடுகளை இயக்க முடியும். எவ்வளவு மின்சாரத்தை ஜன்னல் உற்பத்தி செய்துள்ளது? என்பதை அறியலாம். எப்போது நாம் அறைக்குள் நுழைவோமோ, அந்த நேரத்தில் ஜன்னல் தானாக திறந்திருக்கும் வகையிலும் பதிவு செய்து வைக்க முடியும்.

கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம், இந்த சோலார் ஜன்னலை தயாரித்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஒரு சதுர மீட்டர் ஜன்னலின் விலை 783 அமெரிக்க டாலர்களாகும்.

Next Story