போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயங்கின
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயங்கின
விழுப்புரம்,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் 5 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து ஏற்கனவே திட்டமிட்டப்படி நேற்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 போக்குவரத்து கழக பணிமனைகளில் பணியாற்றி வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் பணிக்கு சென்றனர்.
மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
குறைந்த அளவில் ஓடிய பஸ்கள்
இருப்பினும் விழுப்புரத்தில் நேற்று காலை 5 மணி முதல் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் அந்தந்த பணிமனை வளாகத்திலேயே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பஸ்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. தனியார் பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்தில் நின்றன. அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள், வெளியூர் செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். நேரம் செல்ல, செல்ல கூடுதலாக பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தனியார் பஸ்களில் அலைமோதிய கூட்டம்
அதன் அடிப்படையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் ஈடுபடுத்தி அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ததை காண முடிந்தது. இந்த போராட்டத்தை பயன்படுத்தி தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 முதல் ரூ.5 வரை கட்டண உயர்வு இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பயணம் செய்தனர். அதேபோல் ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
ரெயிலில்...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் தவித்த பயணிகள் ரெயில் பயணத்தை நாடினார்கள். இதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயிலில் கூட்டம் அலைமோதியது. அதுபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால், அந்தந்த பகுதியில் உள்ள தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் ஒரு சில அரசு பஸ்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
65 சதவீத பஸ்கள் ஓடின
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இன்று (நேற்று) மட்டும் 706 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை பயன்படுத்தி பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பெரும்பாலான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 65 சதவீதம் வரை அதாவது 460 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Related Tags :
Next Story