போக்குவரத்து தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’ எதிரொலி: சேலம் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடவில்லை டவுன் பஸ்கள் வழக்கம்போல இயங்கின
போக்குவரத்து தொழிலாளர்களின் ‘ஸ்டிரைக்‘ எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடவில்லை. டவுன் பஸ்கள் வழக்கம்போல இயங்கின.
சேலம்,
13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகையை கணக்கிட்டு உடனே வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடு செய்ய வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காலவரையற்ற ‘ஸ்டிரைக்‘கில் ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினரை தவிர, இதர தொழிற்சங்கங்கள் அனைத்தும் கலந்து கொண்டன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி நேற்று முன்தினம் மாலை முதலே சேலம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அன்று இரவே, சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
60 சதவீத பஸ்கள் ஓடவில்லை
சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பணிமனைகளில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை இயக்க வில்லை. மேலும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் சிலரும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக பஸ்களை இயக்க முன்வரவில்லை. சேலம் மாநகரில் பள்ளப்பட்டி, ஜான்சன்பேட்டை, எருமாப்பாளையம், மணக்காடு ஆகிய பணிமனைகளில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே வேளையில் சேலம் மாநகரில் டவுன் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஆனாலும், அவை குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன.
இதுபோல சேலம் புறநகர் பகுதியான ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பணிமனைகளில் 70 சதவீத பஸ்கள் ஓட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆத்தூர் பணிமனையில் இருந்து தினமும் இயக்கப்படும் 75 பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 450 பஸ்களில் 300 பஸ்கள் வரை ஓடவில்லை. அதாவது 60 சதவீத பஸ்கள் ஓடவில்லை என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள்
பஸ்களை தடையின்றி இயக்குவதற்கு ஏற்கனவே, ஓய்வு பெற்ற டிரைவர்களை தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏற்பாட்டின்பேரில் தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள் கட்டாயமாக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த டிரைவர்களும் சுமார் 1 மணி நேரம் ஓட்டும் வகையில் சேலத்தில் இருந்து நாமக்கல், ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, ஆத்தூர் ஆகிய நகரங்களுக்கு பஸ்களை இயக்கினர். அந்த ஊர்களில் இருந்து வேறு பஸ்சில் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு தினமும் 300–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்று 100–க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இயக்கப்பட்ட ஒருசில அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டது. தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சத்தில் தங்கள் பயணத்தை தவிர்த்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
ஏற்காடு
சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு நேற்று பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. அங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு சேலத்தில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வரும் ஊழியர்கள், நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்வதற்கு முடியவில்லை. எனவே, ஊழியர்கள் பலர் வேலைக்கு செல்லவில்லை. இதனால், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களே பணிக்கு சென்றனர்.

Related Tags :
Next Story