கிருஷ்ணகிரி போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு


கிருஷ்ணகிரி போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 May 2017 12:21 AM IST (Updated: 16 May 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி போலீஸ் நிலையம் அருகே உள்ள வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை சுப்பராய தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன்(வயது 35). இவர் அதே பகுதியில் வெள்ளி பொருட்கள், தங்க நகைகளுக்கு பாலீஸ் போடும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டிவிட்டு ஆனந்தன் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட 3 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு பவுன் தங்ககாசு மற்றும் ரூ. ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை.

போலீசார் விசாரணை

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்நிலையம் அருகே உள்ள வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story