தீவட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்


தீவட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 May 2017 12:52 AM IST (Updated: 16 May 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்

ஓமலூர்

தீவட்டிப்பட்டி அருகே உள்ள கோவிந்தாபுரம் கரடி குண்டு பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு செந்தில்குமார்(39), செந்தமிழன் என 2 மகன்கள் உள்ளனர்.செந்தில்குமாருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவி உள்ளார். ராதா கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கணவர் செந்தில்குமாருடன் தகராறு செய்துகொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் கடந்த 13–ந் தேதி இரவு முருகன், செந்தில்குமாரால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கைது

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று செந்தில்குமாரை கைது செய்தனர். செந்தில்குமார் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

கடந்த 13–ந் தேதி நான் மது குடித்தேன். அப்போது போதை அதிகமாகி விட்டது. இதனால் நான் வீட்டுக்கு சென்று டி.வி.போட்டு பார்த்தேன். அப்போது எனது தந்தை முருகன் அங்கு வந்து வீட்டின் கதவை தட்டி மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தாமல் குடித்துவிட்டு டி.வி. பார்த்து கொண்டிருந்தால் எப்படி பிழைப்பது? என திட்டினார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்த நான் குடிபோதையில் கதவை திறந்து இரும்பு கம்பியால் எனது தந்தையை தாக்கி கீழே தள்ளினேன். அப்போது அருகே இருந்த பந்தல்காலில் அவரது தலை பலமாக மோதி காயம் ஏற்பட்டு அருகில் இருந்த கல்லில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இவ்வாறு செந்தில்குமார் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைதான செந்தில்குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story