நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் பாதிப்பு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
நீலகிரி
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக பெரும்பாலான அரசு பஸ்கள் ஒடவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் நேற்று 80 சதவீதத்திற்கும் மேல் அரசு பஸ்கள் ஒடவில்லை. நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்களை மட்டுமே நம்பி பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாதால் கிராமப்புறங்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் பயணிகள் பாதிப்படைந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதனை தொடர்ந்து மினி பஸ்கள், தனியார் வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நேற்று காலை தனியார் வாகன ஓட்டிகளை கொண்டு, போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசு பஸ்களை இயக்க முற்பட்டனர். இதற்கு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் 11 பேரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை மாலையில் போலீசார் விடுவித்தனர்.
ஆர்வம் காட்டினர்
அரசு பஸ்களை இயக்க தனியார் வாகன ஓட்டிகள் ஓரளவு ஆர்வம் காட்டினர். ஆனால் பஸ்களுக்கு தேவையான கண்டக்டர் வரவில்லை. இதன்காரணமாக அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து தனியார் வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்க அனுமதிக்கப்பட்டன.
இந்த மினிபஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.150 வரை கட்டணம் வசூலித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். கிராமப்புற பகுதிகளுக்கு அதிளவு ஜீப்புகள், வேன்கள் இயக்கப்பட்டது. இதில் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
கூடலூர்–குன்னூர்–கோத்தகிரி
கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 47 பஸ்கள் உள்ளது. இந்த பஸ்கள் ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 287 பணியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கூடலூர் பகுதியில் பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஆனால் பஸ்கள் இயக்கப்படாததால் தங்களது வீடுகளுக்கு மீண்டும் திரும்பி சென்றனர். வழக்கம் போல் கர்நாடகா, கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதற்கிடையில் அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள் சிலர் பணிக்கு வந்தனர்.
இதனால் மதியம் 18 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அந்த பஸ்கள் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மட்டுமே இயக்கப்பட்டன. மீதமுள்ள பஸ்கள் கூடலூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் முறையாக இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் தனியார் ஜீப்புகள், ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள் இயங்கியது. மேலும் ஆர்.டி.ஓ. தினகரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்சண்முகசுந்தரம் ஆகியோர் கூடலூர் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் ஓடவில்லை.
தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:– ஊட்டியில் கோடை சீசன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் அரசு பஸ்கள்ஓடவில்லை. இந்த நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த கார்கள் அல்லது வாடகை வாகனங்களில் வந்திருந்தனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் முழுவதும் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் மற்றும் மினிபஸ்களில் அதிகளவு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு ரூ.500 வரை தனியார் வாகனங்கள் கட்டணம் வசூலித்து உள்ளன. ஆகவே இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு வந்த மாணவ–மாணவிகள் போதிய வாகனங்கள் இன்றி பெரிதும் சிரமம் அடைந்தனர். தற்போது கோடை சீசன் நிலவும் நேரத்தில் சமவெளி பகுதிகளில் இருந்து கூடுதல் பஸ்களை ஊட்டிக்கு இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story