போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் 13-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 அரசு பஸ் பணிமனைகள் உள்ளன. இதில் மொத்தம் 384 பஸ்கள் உள்ளன. இவற்றில் 317 பஸ்கள் இயக்க நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 301 பஸ் டிரைவர்கள், 301 கண்டக்டர்கள், பணிமனை பணியாளர்கள் 56 பேர் உள்ளனர். நேற்று வேலை நிறுத்தம் காரணமாக 69 டிரைவர்கள், 97 கண்டக்டர்கள், பணிமனை பணியாளர்கள் 12 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர்.
மாற்று டிரைவர்கள்
இதனால் அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தனியார் பஸ், ஆம்னி பஸ் டிரைவர்கள், பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டனர். அதேபோன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கனரக ஓட்டுனர் உரிமம், கண்டக்டர் உரிமத்தை பதிவு செய்து உள்ள சுமார் 1,400 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும் பணிக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி 167 பஸ்களே இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு உள்ளன.
தனியார் பஸ்கள் அனைத்தும் முழுவீச்சில் இயங்கின. அதேநேரத்தில் மினிபஸ்களும் திருச்செந்தூர், நெல்லைக்கு இயக்கப்பட்டன. வழக்கமாக செல்லும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் விளக்கம்
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து பஸ்களையும் இயக்குவதற்கு மாற்று டிரைவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு பணிக்கு அழைத்து உள்ளோம். விருப்பத்துடன் வந்தவர்கள் பஸ்களை இயக்கி வருகின்றனர் என்று கூறினார்.

Related Tags :
Next Story