தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் ஊன்ற முயற்சி செய்கிறது நாஞ்சில் சம்பத் பேச்சு
அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்தி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி கால் ஊன்ற முயற்சி செய்கிறது என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
நெல்லை,
அ.தி.மு.க. (அம்மா) அணி நெல்லை மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை தலைவர் சாமி தலைமை தாங்கினார். அருண்குமார், மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கால் ஊன்ற முயற்சி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அதை வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடந்து வருகிறது. 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை கட்டி காக்க டி.டி.வி.தினகரன் வந்தார். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விட்டனர்.
தற்போது தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. கலாசார யுத்தம் நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி கால் ஊன்ற முயற்சி செய்கிறது.
கட்டிக்காப்பார்
டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தார் என வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் யாருக்கு பணம் கொடுத்தார்? என குறிப்பிடவில்லை. தினகரன் மீது போடப்பட்டு உள்ள வழக்கை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காலம் மாறும்போது தினகரன் ஜெயிலில் இருந்து வெளியில் வருவார். அவர், அ.தி.மு.க.வை கட்டிக்காப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோரும் பேசினார்கள். முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கணேசன், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த வி.கே.பி.சங்கர் செய்து இருந்தார்.

Related Tags :
Next Story