கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை வெட்டிக் கொன்ற வாலிபர்
திசையன்விளை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகார மாதாபுரத்தை சேர்ந்தவர் ஜான்பால்(வயது 32). பந்தல் தொழிலாளி. இவருடைய மனைவி பொன் இசக்கி(28). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாயாண்டிக்கும்(27) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
இதை அறிந்த ஜான்பால் மனைவியை அழைத்து இந்த கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனாலும் கணவருக்கு தெரியாமல் பொன் இசக்கி தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜான்பால், பந்தல் தொழிலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால் கதவை தட்டி மனைவி பொன் இசக்கியை அழைத்து கதவை திறந்து விடுமாறு கூறியுள்ளார். அவர் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஜான்பால், வீட்டின் பின்புறம் சென்று அங்குள்ள வாசல் கதவை தட்டியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பொன் இசக்கியின் கள்ளக்காதலன் மாயாண்டி கதவை திறந்து வெளியே ஓட முயற்சித்துள்ளார். ஜான்பாலை கண்டதும் மீண்டும் கதவை பூட்டிவிட்டு முன்வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டார். தனது மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை அறிந்த ஜான்பால் வீட்டுக்குள் சென்று பொன் இசக்கியை கண்டித்தார்.
அரிவாளால் வெட்டிக் கொலை
இது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஜான்பால், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று வீட்டுக்குள் கிடந்த அரிவாளை எடுத்து, பொன் இசக்கியை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்தில் 2 இடங்களில் வெட்டுப்பட்ட பொன் இசக்கி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து அந்த இடத்திலேயே பிணமானார்.
மனைவியை வெட்டிக்கொன்ற ஜான்பால் தனது ஆத்திரம் அடங்கியதும் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு ரத்தம் சொட்ட, சொட்ட திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
கைது
அவரிடம், போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பொன் இசக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து ஜான்பாலை கைது செய்தார்.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், வள்ளியூர் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை, கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளளது.

Related Tags :
Next Story