டாஸ்மாக் கடையை மூடக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாலிக்கயிற்றுடன் பெண்கள் தர்ணா
டாஸ்மாக் கடையை மூடக்கோரி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாலிக்கயிற்றுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது மணப்பாறை பாம்பாட்டிபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு கொடுக்க திரண்டு வந்திருந்தனர்.
அவர்களில் பெண்கள் பலர் கையில் தாலிக்கயிற்றுடன் மஞ்சள், குங்குமத்தை ஒரு பாக்கெட்டிலும், அதனை ஒரு சிறிய தட்டில் வைத்தும் எடுத்து வந்திருந்தனர். கூட்ட அரங்கில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனைவரும் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து கூட்டம் நடந்த அரங்கின் முன்பாக பெண்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், பெண்களின் தாலி பாக்கியத்தை காக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
15 நாட்களுக்குள் மூடப்படும்
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மனு கொடுக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் பொதுமக்கள் 5 பேர் உள்ளே சென்று கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் ராஜராஜனை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை 15 நாட்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார்.
இதேபோல அதவத்தூர், இனியானூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு கும்பலாக வந்தனர். அதவத்தூர் கிழக்கு பகுதியில் ராஜ் நகரில் புதியதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
அணுகுசாலை
திருச்சி பால்பண்ணை-துவாக்குடி வரை அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், விஸ்வ நாதன், சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “திருச்சி பால்பண்ணை-துவாக்குடி வரை அணுகுசாலை அமைப்பதற்கான பணியை வருகிற 31-ந்தேதிக்குள் தொடங்காவிட்டால் ஜூன் மாதத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய ஜனதா தள சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ராபர்ட்கிறிஸ்டி கொடுத்த மனுவில், பள்ளிகளில் 25 சதவீத ஏழை, எளிய மாணவர்கள் சேர்க்கையை நடைமுறைப்படுத்த கோரியும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தியதை ரத்து செய்யக்கோரியும் வருகிற 20-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித் திருந்தார்.
டிரைவர்கள்
திருச்சி சரக்கு வேன் டிரைவர்கள் சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமையில் டிரைவர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், “பாலக்கரை, மயிலம்சந்தை, டவுன், சப்-ஜெயில் ரோடு ஆகிய இடங்களில் சரக்கு வேன்களில் இரும்பு கம்பிகள், கட்டுமான தளவாட பொருட்கள் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.

Related Tags :
Next Story