ஒடிசாவில் இருந்து சரக்குரெயிலில் 2,620 டன் உரம் தஞ்சைக்கு வந்தது


ஒடிசாவில் இருந்து சரக்குரெயிலில் 2,620 டன் உரம் தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 16 May 2017 4:00 AM IST (Updated: 16 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இருந்து சரக்குரெயிலில் 2,620 டன் உரம் தஞ்சைக்கு வந்தது

தஞ்சாவூர்,

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து சரக்குரெயிலில் 42 வேகன்களில் 2 ஆயிரம் டன் டி.ஏ.பி. உரமும், 620 டன் காம்ப்ளக்ஸ் உரமும் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Related Tags :
Next Story