அம்பையில் விவசாய பொருட்களை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கி கலெக்டர் கருணாகரன் தகவல்
விவசாய பொருட்களை இருப்பு வைக்க அம்பையில் குளிர்பதன கிடங்கி அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கருணாகரன் கூறினார்.
நெல்லை,

கருத்தரங்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் ஆகியவற்றின் சார்பில் திசு வாழை வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நெல்லை சந்திப்பில் நேற்று நடந்தது. மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலைத்துறை தலைவர் பாலமோகன் தலைமைதாங்கினார். கலெக்டர் கருணாகரன் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் வாழை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 52 மெட்ரிக்டன் வாழைக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சொட்டுநீர் பாசனத்தில் வாழை பயிரிடலாம். அதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறிய விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. வாழைகளுக்கு 10 முதல் 12 மாதங்கள் வரை தண்ணீர் தேவைப்படுகிறது எனவே விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அறுவடை காலங்களில் அதிக அளவில் உற்பத்தி கிடைக்கும் இதனால் விலை குறைந்துவிடும். இதனால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதில்லை. இதற்காக அம்பையில் விவசாய பொருட்களை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கி அமைக்கப்பட்டு உள்ளது.இதனை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ரூ.32 கோடி வறட்சி நிவாரணம்
நெல்லை மாவட்டத்தில் உளுந்து, பயிர்கள் பயிரிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 42 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.32 கோடி வறட்சி நிவாரணம் வாங்கப்பட்டு உள்ளது. வங்கிகடன்களை நீண்டகால கடன்காக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாய கடன்களுக்காக விவசாயிகளிடம் கடுமையாக நடந்துக்கொள்ளக்கூடாது என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து உள்ள 52 ஆயிரம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தொழில் நுட்ப மைய இயக்குனர் பாண்டியன் பேசுகையில், இந்தியாவில் நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. குளங்கள், ஏரிகள் அனைத்தும் கட்டிடங்களாக மாறிவருகின்றன. இதனால் நீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது எனவே விவசாயிகள் அனைவரும் தண்ணீர் மேலாண்மையை கடைபிடிக்கவேண்டும். விவசாயிகள் சொட்டுநீர்பாசனத்திற்கு மாறவேண்டும் என்றார்.

Related Tags :
Next Story