தி.மு.க. சார்பில் கண்மாயை தூர்வாரும் பணி தொடங்கியது


தி.மு.க. சார்பில் கண்மாயை தூர்வாரும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 17 May 2017 2:00 AM IST (Updated: 16 May 2017 8:06 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் தி.மு.க. சார்பில் கண்மாயை தூர்வாரும் பணி தொடங்கியது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் தி.மு.க. சார்பில் கண்மாயை தூர்வாரும் பணி தொடங்கியது.

தூர்வாரும் பணி

தமிழகத்தில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி பொட்டகுளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாயை தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் ஏற்பாட்டில், தூர்வாரும் பணி நேற்று காலையில் தொடங்கியது.

வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். ஒரு பொக்லைன் எந்திரம் மூலம் கண்மாயை தூர்வாரும் பணி நடந்தது. கண்மாயில் தோண்டப்பட்ட மணல் மூலம் கண்மாயின் கரைகளை பலப்படுத்தினர். இந்த பணியில் தி.மு.க.வினருடன், பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று கண்மாயை தூர்வாரினர்.

கலந்து கொண்டவர்கள்

ஒன்றிய செயலாளர் முருகேசன், இனாம் மணியாச்சி பஞ்சாயத்து செயலாளர் முத்துராமன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சந்தானம், பொன்னுச்சாமி, ஒன்றிய அமைப்பாளர் டாங்கே, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மார்ட்டின், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோபால்ராஜா, முன்னாள் நகர செயலாளர் சிவா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, நகர துணை செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story