ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
ஈரோடு பெரியவலசில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 154 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 9 கடைகளும், அந்தியூரில் ஒரு கடையும் என மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்தநிலையில் ஈரோடு பெரியவலசு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கடை அகற்றப்படவில்லை. இந்தநிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பகல் 11 மணிக்கு கடையின் முன்பு திரண்டனர். அவர்களுடன் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் அரசியல் கட்சியினர் சிலரும் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தனபாண்டியன், ராஜவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன், சேகர், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஈரோடு பெரியவலசு பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு குடிமகன்கள் ரோட்டோரம் அமர்ந்து மது அருந்துகிறார்கள். மேலும், குடிபோதையில் ஆங்காங்கே அரைநிர்வாண கோலத்தில் விழுந்து கிடப்பதால் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பெண்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்’’, என்றனர்.
சுவர் இடிப்பு
அதற்கு போலீசார் கூறும்போது, ‘‘அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கை தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்’’, என்று கூறினார்கள். ஆனால் போலீசாரின் வாக்குறுதியை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் தடையை மீறி டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது கடைக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தல்களை பிடுங்கி வீசினார்கள். கடையில் தொங்கவிடப்பட்டு இருந்த பெயர்பலகைகளை ரோட்டில் தூக்கி வீசினர். மேலும், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து வெளியே இழுத்து வந்தனர்.
டாஸ்மாக் கடைக்கு பின்புறம் பார் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு செல்வதற்கு கடைக்கு அருகில் வழி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாருக்கு செல்லும் வழியில் உள்ள கதவை திறக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மேலும், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கதவு போடப்பட்டு இருந்த சுவரையே இடித்து தள்ளினார்கள். பலமாக அமைக்கப்படாததால் சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
போர்க்களம்
அதன்பின்னர் பொதுமக்கள் பாருக்குள் ஓடினார்கள். அப்போது பாரில் வைக்கப்பட்டு இருந்த அவித்த முட்டைகள், நிலக்கடலை, வெள்ளரிக்காய் போன்ற உணவு பொருட்களை எடுத்து கீழே கொட்டினார்கள். மேலும், பாரில் அமருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டாலான இருக்கைகளையும் பொதுமக்கள் ஆவேசத்துடன் உடைத்தனர். சிறிது நேரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். உடனே போலீசார் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் அந்த பகுதியில் யாரும் நிற்காத வகையில் அனைவரையும் கலைந்து செல்ல கூறினர்.
டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. இதையடுத்து கடையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக பெரியவலசு பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story