அரக்கோணம் அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த அனந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23),
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த அனந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23), தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அனந்தாபுரத்தில் இருந்து தக்கோலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தக்கோலம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தக்கோலம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் அசோக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அசோக்குமார், ஜீவானந்ததிற்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஜீவானந்தத்திற்கு ஆதரவாக அவருடைய நண்பர்கள் ஆனந்தன், கந்தவேல் (24), குமரன் ஆகியோர் அசோக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அசோக்குமாரை கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தவேல் என்பவரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story